தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நிவாரணம்: பஞ்சாப்பிலிருந்து சேலம் வந்த 2,635 டன் கோதுமை மூட்டைகள் - food corporation

சேலம்: பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு 2635 டன் கோதுமை மூட்டைகளை சரக்கு ரயில் மூலமாக மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

பஞ்சாபிலிருந்து 2635 டன் கோதுமை சேலம் வந்தடைந்தது
பஞ்சாபிலிருந்து 2635 டன் கோதுமை சேலம் வந்தடைந்தது

By

Published : May 19, 2021, 8:17 PM IST

நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். நோய் பரவல் அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீடுகளில் முடங்கி கிடப்பதால் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்களின் நலன் கருதி கரோனா நிவாரணமாக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா ஐந்து கிலோ கோதுமை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனையடுத்து மத்திய வேளாண்மை அமைச்சகம், மத்திய அரசின் ஒதுக்கீட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு சரக்கு ரயில் மூலமாக கோதுமை அனுப்பி வைத்துள்ளது.

அதன்படி பஞ்சாப் மாநிலம் முட்ஷர் பகுதியிலிருந்து 2,635 டன் கோதுமை மூட்டைகள் ஏற்றப்பட்ட சரக்கு ரயில், இன்று (மே.19) சேலம் ரயில் நிலையம் வந்தடைந்தது.

இதையடுத்து இந்திய உணவுக் கழக சேலம் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் 42 பெட்டிகளும் திறக்கப்பட்டு, 2,635 டன் கோதுமை மூட்டைகள், சேலத்தாம்பட்டியில் உள்ள குடோன்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.

அங்கிருந்து லாரிகள் மூலம் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அவை அனுப்பி வைக்கப்படுகின்றன. இன்னும் சில நாட்களில் இவை பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று இந்திய உணவுக் கழக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மதுரை வீரனுக்கு தடுப்பூசி

ABOUT THE AUTHOR

...view details