சேலம் கொண்டலாம்பட்டி அருகே உத்தமசோழபுரத்திலுள்ள மலங்காடு என்ற பகுதியில் நேற்றிரவு இடியுடன் கன மழை பெய்தது. அப்போது மலங்காட்டை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி (30), நண்பர் மாதேஷ்(40) உடன் தனது தோட்டத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அவர்கள் மீது இடி தாக்கியது. சுப்பிரமணி மற்றும் மாதேஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.
சேலத்தில் பலத்த மழை; இடி தாக்கி விவசாயிகள் பலி! - death
சேலம்: கொண்டலாம்பட்டி பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையின் போது இடி தாக்கி இரண்டு விவசாயிகள் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் இடி தாக்கி இருவர் பலி
இதில் இருவருமே அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. பின் விரைந்து வந்த காவலர்கள் சடலங்களை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். நண்பர்கள் இருவரும் இடி தாக்கி இறந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.