சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி பகுதியில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில், கோடைக்காலங்களில் கெங்கவல்லி ஆத்தூர் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் ஏரியில் குளிக்கச் செல்வது வழக்கம். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பாண்டியன் மகன் சிவசங்கர்(20), நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்த ராஜகோபால் மகன் கோகுல்(20) ஆகிய இருவரும் வலசக்கல்பட்டி ஏரியில் நேற்று குளித்துள்ளனர்.
ஆத்தூர் அருகே கல்லூரி மாணவர்கள் இருவர் ஏரியில் மூழ்கி பலி! - lake
சேலம்: ஆத்தூர் அருகே குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர், ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர்கள் இருவர் ஏரியில் மூழ்கி பலி
அப்போது கோகுல் நீரில் மூழ்கியுள்ளார். அதனை அறிந்த சிவசங்கர், கோகுலை காப்பாற்ற சென்ற நிலையில் அவரும் நீரில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இருவரின் உடலையும் மீட்டனர். பின்னர் இருவரின் சடலங்களையும் உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்குதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.