சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா பெரியசாமி (42). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததால், சூரமங்கலம் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.