தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலாற்றில் குடிபோதையில் விழுந்த இளைஞர்: மீட்புப் பணி தீவிரம் - young man who fell into palar river while drunk

ராணிப்பேட்டை: பாலாற்றில் குடிபோதையில் விழுந்த இளைஞரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், தேசிய மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

குடிபோதையில் விழுந்த இளைஞர்
குடிபோதையில் விழுந்த இளைஞர்

By

Published : Nov 30, 2020, 6:11 PM IST

Updated : Nov 30, 2020, 7:26 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் வண்டி மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சரத்குமார் (24). இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலாஜி கரையின் ஓரமாக அமர்ந்து மது அருந்தினார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக பாலாற்றில் செல்லும் வெள்ளத்தில் விழுந்தார்.

இது குறித்து அவரது நண்பர்கள் தீயணைப்பு வீரர்கள், தேசிய மீட்புப் படையினர் ஆகியோருக்குத் தகவல் அளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள், தேசிய மீட்புப் படையினர் ஆகியோர் குடிபோதையில் பாலாற்றில் விழுந்த இளைஞரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி : பாலாற்றில் வெள்ளம்

Last Updated : Nov 30, 2020, 7:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details