தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தையுடன் இருந்த பெண்ணை பரிதவிக்க விட்ட அரசு பேருந்து ஊழியர்கள்.. 3 பேருந்துகள் சிறைபிடிப்பு! - today Ranipet news

ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் கிராமத்துக்கு பேருந்து வராததை கண்டித்து, 3 அரசு பேருந்துகளை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரே ஒரு பயணிக்காக அரசு பேருந்து இயங்காது.. 3 பேருந்துகள் சிறைபிடிப்பு!
ஒரே ஒரு பயணிக்காக அரசு பேருந்து இயங்காது.. 3 பேருந்துகள் சிறைபிடிப்பு!

By

Published : Feb 7, 2023, 1:39 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் கிராமத்துக்கு பேருந்து வராததை கண்டித்து, 3 அரசு பேருந்துகளை பொதுமக்கள் சிறை பிடிப்பு

ராணிப்பேட்டை:கலவை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பிரியா (36). இவர் தனது 2 குழந்தைகளை மருத்துவம் பார்க்க வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு, மீண்டும் தனது ஊருக்குச் செல்வதற்காக ஆரணி பேருந்து நிலையத்தில் எண் 3 கொண்ட அரசு பேருந்தில் ஏறியுள்ளார். தொடர்ந்து மேல்புதுபாக்கம் அருகே பேருந்து வந்ததும், ஜெயப்பிரியா தவிர, மற்ற அனைத்து பயணிகளும் இறங்கி உள்ளனர்.

எனவே வாழைப்பந்தல் கிராமத்துக்கு பேருந்து செல்லாது என நடத்துனர் கூறியுள்ளார். இதற்கு, ‘நான் எப்படி கை குழந்தைகளை தூக்கிக் கொண்டு செல்வேன்’ என அப்பெண் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, ஆரணிக்கே மீண்டும் அந்த பெண்ணை அழைத்து வந்து பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுள்ளனர்.

அப்போது அதிக உடல் சோர்வில் இருந்த ஜெயப்பிரியா மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த ஜெயப்பிரியாவின் ஊர்காரர், இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாழைப்பந்தல் கிராம மக்கள், மீண்டும் அந்த அரசு பேருந்து இரவு 7.30 மணிக்கு வாழைப்பந்தல் வந்தபோது, அப்பேருந்தை சிறைப்பிடித்தனர்.

மேலும் எண் 34 மற்றும் 20 உள்பட மொத்தம் 3 அரசுப் பேருந்தையும் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த வாழைப்பந்தல் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து வந்த ஆரணி போக்குவரத்து கழக பணிமனை அலுவலர் ரகுராமன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து இனிவரும் காலங்களில் இது போன்று நடைபெறாது என உறுதி அளித்ததன் அடிப்படையில், கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:அத்துமீறலுக்குள்ளாகும் நீர் தொட்டி: அன்று புதுக்கோட்டை.. இன்று விருதுநகர்... கைப்பற்றப்பட்ட நாயின் சடலம்!

ABOUT THE AUTHOR

...view details