தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் கட்டிப்பிடித்து உருண்ட மாணவர்கள்! - Ranipet news in tamil

Arakkonam: அரக்கோணம் ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் வந்த இரண்டு மாணவர்கள் தண்டவாளத்தில் கட்டிபிடித்து புரண்டனர். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் ரயில் ஏதும் வராததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் கட்டிப்பிடித்து உருண்ட மாணவர்கள்!
அரக்கோணம் ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் கட்டிப்பிடித்து உருண்ட மாணவர்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 8:37 AM IST

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் வந்த இரண்டு மாணவர்கள் தண்டவாளத்தில் கட்டிபிடித்து புரண்டனர்

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் மொத்தம் 8 நடைமேடைகள் உள்ளன. இவ்வழியாக தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் சென்று வருகின்றன. மேலும் இதில் அனைத்து நடைமேடைகளிலும் பயணிகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணிக்கு நடைமேடை எண் ஐந்திற்கு வந்த இரண்டு ஐடிஐ மாணவர்கள், கஞ்சா போதையில் தண்டவாளத்தைக் கடக்க முடியாமல், உருண்டு பிரண்டு கொண்டு இருந்துள்ளனர். அதில் ஒரு மாணவர், அங்கு செல்லவிருந்த சரக்கு ரயிலுக்கு அடியில் சென்று படுத்துக் கொண்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் இருவர், அவர்களை மீட்டு நடைமேடைக்கு அழைத்து வந்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் ரயில் ஏதும் வராததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து, மாணவர்களைக் கண்டித்து அவர்களை விரட்டி அடித்துள்ளனர். இச்சம்பவத்தால் ரயில் நிலையம் சிறுது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க:இஸ்ரேல் - பாலஸ்தீன போர்; ஐநாவின் உடனடி மனிதாபிமான போர் நிறுத்த வரைவு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு!

ABOUT THE AUTHOR

...view details