ராணிப்பேட்டை:வாலாஜாபேட்டை நகராட்சியின் கச்சா நாயக்கர் தெரு, 19ஆவது வார்டு பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முறையாக குடிநீரானது விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
எனவே, இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வாலாஜா நகராட்சி அலுவலகம் முன்பு இன்று (டிச.25) சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முறையாக குடிநீரை வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.