தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொது மக்கள் திடீர் போராட்டம்! - ராணிப்பேட்டை செய்திகள்

ராணிப்பேட்டை: கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 100கும் மேற்பட்ட பெண்கள் திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் திடீர் போராட்டம்
மக்கள் திடீர் போராட்டம்

By

Published : Nov 11, 2020, 4:14 AM IST

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த நந்தியாலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்விஷாரம் மலைமேடு கிராமத்தில் 5 தெருக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இவர்கள் பல ஆண்டு காலமாக நந்தியாலம் ஊராட்சிக்கு வரி செலுத்தி வந்த நிலையில், அந்த பகுதியில் தேவையான கழிவுநீர் கால்வாய் வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராமல் அப்பகுதியை தனியே ஒதுக்கியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், சட்டப்பேரவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் புகார் மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை என கூறும் அப்பகுதி மக்கள், அடிப்படை வசதிகள் இல்லாததால் கழிவுநீர் அங்கங்கே தேங்கி அதிகப்படியான கொசு உருவாகியுள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அவ்வப்போது நோய்தொற்று ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், திடீரென 100கும் மேற்பட்டோர் ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு கழிவுநீர் கால்வாய், குடிநீர் தேக்க தொட்டி மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details