தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொசஸ்தலை ஆற்று தடுப்பணை திறப்பு - ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்ததையடுத்து தடுப்பணை கதவு திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது.

Ranipet
கொசஸ்தலை

By

Published : Nov 27, 2020, 10:55 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நெமிலி பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க எம்எல்ஏ வாயிலாக தமிழ்நாடு அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனையடுத்து, அசநெல்லிகுப்பம் பகுதியில் தடுப்பணை அமைக்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு முடிவடைந்தன. தற்போது பருவ மழையின் காரணமாக இன்று (நவ. 27) தடுப்பணை கதவு திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது.

இதில் அரக்கோணம் எம்எல்ஏ ரவி மற்றும் சோளிங்கர் எம்எல்ஏ சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு தடுப்பணை கதவை திறந்து வைத்து நீரை மலர் தூவி வரவேற்றனர். பின்னர் தடுப்பணையில் தேங்கியுள்ள நீரை பார்வையிட்டு அதன் நிலவரம் குறித்து அலுவலர்களிடம் கேட்டு தெரிந்துக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details