ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மேல் புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி உமா. இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
மனைவி இறந்த துக்கம் தாங்கமல் கணவர் தற்கொலை - மனைவி இறந்த துக்கம் தாங்கமல் கணவன் தற்கொலை
ராணிப்பேட்டை: கலவை அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் மனைவி உமா கடந்த சில நாள்களாக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல். 13) உயிரிழந்தார். இதனால் துக்கம் தாளமுடியாத செல்வம், வீட்டின் பின்னால் இருந்த வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கலவை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து செல்வத்தின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.