தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடம்புரண்ட சரக்கு ரயில்: போக்குவரத்து பாதிப்பு!

அரக்கோணம் அடுத்த மோசூர் ரயில் நிலையம் அருகே சென்னையில் இருந்து ரேணிகுண்டா வரை செல்லக்கூடிய சரக்கு ரயில் புரண்டு விபத்துக்குள்ளானது.

Goods Train Derailed in Mosur near Arakkonam, அரக்கோணம் மோசூர் அருகே ரயில் தடம்புரண்டது
அரக்கோணம் மோசூர் அருகே ரயில் தடம்புரண்டது

By

Published : Dec 18, 2021, 5:12 PM IST

ராணிப்பேட்டை:சென்னை திருநின்றவூரில் இருந்து சரக்குகளை ஏற்றுவதற்காக 43 காலி பெட்டிகளுடனான சரக்கு ரயில் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிற்கு புறப்பட்டது.
அரக்கோணம் மார்க்கமாக மோசூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் 22ஆவது பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்தை உணர்ந்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியுள்ளார். ஒரே ஒரு பெட்டியின் சக்கரங்கள் முன்னுக்குப்பின் திரும்பிவிட்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது.

மோசூர் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டது

ரயில் போக்குவரத்து பாதிப்பு

விபத்து காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக பின்னால் வந்த இரண்டு மின்சார ரயில்கள் மோசூர், திருவாலங்காடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரயில் விபத்து குறித்து ரயில்வே அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை அரக்கோணம் மார்க்கமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மோசூர், திருவாலங்காடு அருகே நிறுத்தப்பட்ட ரயில்கள மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும், அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் ரயில் பாதை பாதிப்பு இல்லாததால் அந்த மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக ரயில் சேவைக்கான மாற்று பாதையில் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே அலுவலர்கள் முயன்று வருகின்றனர்.

இதையும் படிங்க: பிபின் ராவத் உள்ளிட்டோரை மீட்ட தீயணைப்புத் துறையினரின் துயரம் - செவிசாய்க்குமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details