ராணிப்பேட்டை: கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதி திராவிட குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (28). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அஸ்வினி (25). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆன நிலையில், நவிஷ்கா (4) என்ற பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், அவரது சொந்த ஊரான மாம்பாக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்பத்துடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, ரமேஷின் அண்ணன் விக்னேஷ் (31) நாட்டு பட்டாசு வெடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, விக்னேஷ் வைத்த நாட்டு பட்டாசு சிறுமி மீது சிதறி விழுந்து வெடித்துள்ளது.