தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்ப பிரச்னை: முன்னாள் ரயில்வே ஊழியர் தீக்குளித்து தற்கொலை! - தீக்குளித்து தற்கொலை

ராணிப்பேட்டை: குடும்பத்தினர் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்த விரக்தியில் முன்னாள் ரயில்வே ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

former-railway-employee-commits-suicide-by-fire
former-railway-employee-commits-suicide-by-fire

By

Published : Mar 4, 2020, 10:19 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மங்கம்மாபேட்டை அருகே ஏரியில் பாதி எரிந்த நிலையில் சடலம் கிடந்துள்ளது. அதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அரக்கோணம் நகர காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் பிளாஸ்டிக் மண்ணெண்ணெய் கேன், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவை கிடந்துள்ளது.

அதையும் கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சடலமாக மீட்கப்பட்டது அரக்கோணம் மங்கம்மா பேட்டையை பொன்னியம்மன் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராயில்வே பணியாளர் செல்வராஜ்(64) என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காவல் துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரயில்வேயில் பணிபுரிந்ததன் மூலம் செல்வராஜ் தனக்கு கிடைத்த ஓய்வுதிய பணத்தை வங்கிக்கணக்கில் வைத்துள்ளார். இவரது குடும்பத்தினர் அந்தப் பணத்தை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன விரக்தியின் காரணமாகவே செல்வராஜ் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.

குடும்ப பிரச்னை காரணமாக முன்னாள் ரயில்வே ஊழியர் தீக்குளித்து தற்கொலை

இருப்பினும் இந்தச் சம்பவத்தில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முன்னாள் ரயில்வே ஊழியர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:காவலாளியை தாக்கிய வடமாநில இளைஞரை நையபுடைத்த பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details