தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆற்காடு அதிமுக பிரமுகர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை! - Arcot AIADMK personality Jegan

ஆற்காடு அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் 60 சவரன் தங்க நகைகள் உள்பட 4.5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்த கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஆற்காடு அதிமுக பிரமுகர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை
ஆற்காடு அதிமுக பிரமுகர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை

By

Published : May 16, 2023, 12:22 PM IST

ராணிப்பேட்டை:ஆற்காடு அடுத்த புது மாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர், ஜெகன் (45). அதிமுகவைச் சேர்ந்த இவர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆவார். இந்த நிலையில், இவர் நேற்று (மே 15) இரவு தனது மனைவி உடன் வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் தூங்கி உள்ளார். பின்னர் காலையில் எழுந்து வீட்டின்கீழ் பகுதிக்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துள்ளார். உடனடியாக, வீட்டினுள் சென்று பார்த்ததில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 சவரன் தங்க நகைகள், 4.5 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் சுமார் 250 கிராம் வெள்ளிப் பொருட்கள் ஆகிய அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்துள்ளது.

இதனையடுத்து இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆற்காடு கிராமிய காவல் துறையினர், வீடு முழுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், திருடுபோன வீட்டிற்கு வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆற்காடு கிராமிய காவல் துறையினர், வீட்டின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:வடிவேலு பட காமெடி பாணியில் வத்தல் பொடி தூவி 100 சவரன் நகை, பணம் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details