இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மீன் எடை பார்க்கும் நிலையங்கள் உள்ளன. பாம்பன் கடலில் இருந்து மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் இங்கு எடை போடப்பட்ட பின்புதான் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாம்பனில் பாலன் என்பவர் சொந்தமாக மீன் எடை நிலையம் வைத்துள்ளார். எடை சரிபார்க்கப் பயன்படுத்தும் மின்சார திராசுவை சார்ஜ் செய்வதற்காக மீனவர் முகேஷ் (22) சென்றுள்ளார்.
பாம்பனில் மின்சாரம் தாக்கி மீனவ இளைஞர் மரணம்
ராமநாதபுரம்: பாம்பனில் மீன் எடை பார்க்கும் மின்தராசுக்கு சார்ஜ் போட சென்ற மீனவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது திராசில் ஏற்பட்ட மின் கசிவால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முகேஷை காப்பாற்ற முயன்ற கடை உரிமையாளர் பாலன், காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.