தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக அகதிகள் தினம்: 'படித்தும் பணிவாய்ப்பு இல்லை' என அகதிகள் வேதனை! - உலக அகதிகள் தினம்

ராமநாதபுரம்: படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக மண்டபம் அகதிகள் முகாமில் இருப்பவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மண்டபம் அகதிகள்

By

Published : Jun 20, 2019, 10:34 AM IST

இலங்கையில் 1983ஆம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிரான இன கலவரம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அங்கு வசித்து வந்த இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாடு நோக்கி அகதிகளாக படையெடுத்து வந்தனர். அவர்கள் ராமேஸ்வரம் மண்டபம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் சுமார் 130 முகாம்களில் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மண்டபம் முகாமில் மட்டும் 1,629 பேர் அகதிகளாக உள்ளனர்.

ஆண்டுதோறும் ஜூன் 20ஆம் தேதி உலக அகதிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது மண்டபம் முகாம்களில் இருக்கும் அகதிகளின் வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிய அகதிகளில் சிலரை சந்தித்தோம்.

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கேஸ்வரி(60) என்ற மூதாட்டி, 1999ஆம் ஆண்டு இலங்கை போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அகதியாக மண்டபம் முகாமிற்கு வந்ததாகவும் தற்போது மகன், மகள் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். இங்கு வந்த பிறகு ஒரேயொரு முறை இலங்கைக்கு சென்று திரும்பியதாகவும் ஆனால் அங்கேயே வசிக்க விரும்பவில்லை என்றும் கூறினார். மண்டபம் முகாமில் அரசு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அமைத்துத் தந்திருப்பதோடு உணவுப் பொருட்களையும் வழங்குவதால் தாங்கள் சுதந்திரமாக வசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 1997ஆம் ஆண்டு குழந்தைகளின் கல்வி மற்றும் மனைவியின் உடல்நலம் மருத்துவம் ஆகியவற்றை முன்னிட்டு கப்பல் வழியாக மண்டபம் முகாமிற்கு அகதியாக வந்து சேர்ந்ததாகவும் தற்பொழுது நிம்மதியாக வசித்து வருவதாகவும் தெரிவித்தார். ஆரம்ப காலகட்டத்தில் அகதிகள் அதிக அளவில் இருந்ததன் காரணமாக அடிப்படை வசதிகள் சற்று குறைவாக இருந்ததாகவும் தற்போது அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் தங்கள் பிள்ளைகள் படித்து பட்டம் பெற்ற பிறகும் தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும், இதனால் ஏராளமான பிள்ளைகள் படிப்பை பாதியில் நிறுத்தும் சூழலுக்கு தள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

மண்டபம் அகதிகள் முகாம்

மண்டபம் முகாமில் உள்ள அகதிகளை கண்காணிப்பது மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் இலங்கை அகதிகள் பிரிவு இயங்கி வருகிறது. இங்கு ஓர் ஆய்வாளர், ஒரு சார்பு ஆய்வாளர், நான்கு தலைமை காவலர்கள் இரண்டு காவலர்கள் மற்றும் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் குழுவைச் சேர்ந்த 40 பேர் பணியாற்றி வருகின்றனர். இது தவிர்த்து மத்திய, மாநில உளவுத்துறையினரும் கண்காணித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details