தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி மறுப்புத் திருமணம் செய்ததால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கிராமம்: ஊருக்குள் அனுமதிக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெண் மனு!

ராமநாதபுரம்: சாதி மறுப்புத் திருமணம் செய்ததால் தன்னுடைய குடும்பத்தைக் கிராமத்தினர் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததைத் தொடர்ந்து, மீண்டும் தன்னை ஊருக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Woman's family petition to District Collector to include inside village
Woman's family petition to District Collector to include inside village

By

Published : Nov 26, 2019, 8:11 AM IST

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையிலுள்ள மீனவர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முனியசாமி என்பவருடன் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தேவி, ஏழு ஆண்டுகளுக்கு முன்பே கணவனைப் பிரிந்து மீனவர் குப்பம் பகுதியில் தன் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

ஊருக்குள் அனுமதிக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் பெண் மனு

எனவே தன்னை மீண்டும் ஊருக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தேவி மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி: குடித்துவிட்டு வந்து சேட்டை செய்த முதியவர்!

ABOUT THE AUTHOR

...view details