தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொல்ல முயற்சி செய்த மாற்றுத்திறனாளி கணவர் - மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த மனைவி! - latest ramanathapuram news

தன்னை கொலை செய்ய முயற்சித்த மாற்றுத்திறனாளி கணவரை, மண்ணெண்ணெய் ஊற்றி மனைவி எரித்துக் கொலை செய்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

wife set fire for her husband in ramanathapuram
கொல்ல முயற்சி செய்த மாற்றுத்திறனாளி கணவர்...மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த மனைவி!

By

Published : Feb 28, 2021, 6:41 PM IST

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகேயுள்ள முனுசுவலசை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முனியசாமி, வீட்டில் எரிந்த நிலையில் கிடப்பதாக கேணிக்கரை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, அங்கு சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, அவருடைய மனைவி மல்லிகாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில், தனது கணவர், தன்னை துன்புறுத்தியதாகவும், அடிக்கடி குடித்துவிட்டு தன்னையும் தன் குழந்தையையும் அடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நேற்று தன்னை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்ததாகவும், எனவே இரவு முனியசாமி தூங்கும்போது வீட்டுக்கூரையின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி எரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் மல்லிகாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மாற்றுத்திறனாளி கணவரை தீ வைத்து மனைவி எரித்து கொலை செய்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:இளம் பட்டதாரி பெண் கொலை வழக்கில் கொலையாளி கைது!

ABOUT THE AUTHOR

...view details