தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீரைத் தேடி அலையும் பறவைகள் - நடவடிக்கை எடுக்குமா அரசு? - பறவைகள் சரணாலயம்

ராமநாதபுரம்: தண்ணீர் இல்லாமல் பறவைகள் சரணாலயங்கள் அனைத்தும் வறண்ட பாலைவனம்போல் காட்சியளிக்கின்றன. இதனால்,பறவைகள் நீரைத் தேடி அதிக தூரம் அலையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

பறவைகள்

By

Published : May 11, 2019, 10:39 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தாங்கல், சித்திரகுடி, காஞ்சிரங்குளம், மேலச்செல்வனூர், சக்கரக்கோட்டை என ஐந்து பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவம்பரில் தொடங்கி மே மாதம் வரையிலான காலங்களில் தென் கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் இருந்து வரும் பறவைகள், தங்கியிருந்து குஞ்சு பொறித்து செல்வது வழக்கம். கடந்த முன்று ஆண்டுகளாக ராமநாதபுரத்தில் போதிய மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், வலசை வரும் பறவைகளின் வருகையிலும் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இருப்பினும், வனத்துறையினரின் நடவடிக்கைகளால் பெரும்பாலான பறவைகள் சரணாலயம் வந்தடைய காரணமாக அமைகிறது.

தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பறவைகள்

கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 50 ஆயிரத்திற்கும் மேலான பறவைகள் வந்திருப்பதும், 15 விழுக்காடு பறவை வருகை அதிகரித்திருப்பதும், 20 புதிய பறவை இனங்கள் வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் தண்ணீரின்றி நீர்நிலைகள் வறண்ட பாலைவனம்போல் காட்சி அளிக்கிறது. மேலும், தேர்த்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் இல்லாமல் மரங்கள் காய்ந்துபோய் பட்டுப்போனதால், பறவைகள் முட்டை பொறித்து தங்களின் குஞ்சுகளுக்கு உணவு நீர் தேடி அதிக தூரம் அலையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தேர்த்தாங்கல் பறவைகள் சரணாலயம்

இதுகுறித்து ஈடிவி பாரத் செய்தியாளரிடம் வனத்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், 'ராமநாதபுரம் வனத்துறை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சூரிய ஒளி மூலம் இயங்கும் போர்வெல் மோட்டர், 5 சரணாலயங்களில் அமைக்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். போர்வெல் அமைந்தால் பறவைகளின் தண்ணீர் தேவை போக்கப்படும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details