ராமநாதபுரத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தில் மொத்தமாக 77 மோட்டார் அறைகள் உள்ளன. இதன் மூலம் குடிநீர் மாவட்டம் தோறும் சென்று சேர்கிறது. இதில் 8 மணி நேரப் பணிக் கணக்கில் 231 தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும். அவர்களுக்கு மாதம் 13,351 ரூபாய் வீதம் 31 லட்சம் ஊதியமாக அரசிடம் பெறப்படுகிறது. ஆனால் ராமநாதபுரம் குடிநீர் வாரியத்தில் 154 ஊழியர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டு 12 மணிநேர கணக்கில் பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கு 4,000 முதல் 6,000 ரூபாய் வரை மட்டுமே மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.
குடிநீர் வாரிய தொழில் சங்கம் போராட்டம் - சம்பளப் பிரச்னை
ராமநாதபுரம்: குடிநீர் வாரியத்தில் தொழிலாளர்கள் ஊதியத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுவதாக தமிழ்நாடு குடிநீர் வாரியம் ராமநாதபுரம் மாவட்ட தொழில் சங்கம் சார்பாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
மொத்தமாக ஏழு லட்சம் மட்டுமே அவர்களுக்கு சம்பளமாக வழங்கப் பட்டு 24 லட்சம் ரூபாயை ஒப்பந்ததாரர்கள், குடிநீர் வாரிய அலுவலர்களும் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி இன்று (ஆகஸ்ட் 19) ராமநாதபுரம் குடிநீர் வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு குடிநீர் வாரியம் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் வாரிய சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் சிஐடியு மாவட்ட குடிநீர் வாரிய உதவி தலைவர் சிவாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் குடிநீர் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து செய்தியாளரிடம் உதவித் தலைவர் சிவாஜி கூறும்பொழுது, ராமநாதபுரத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பொழுதிலிருந்து இந்த ஊழல் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து இதில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.