தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் வாக்கு எண்ணும் பணிக்கான ஏற்பாடுகள் தயார்! - ramanthapuram

ராமநாதபுரம்: மக்களவைத் தேர்தல், பரமக்குடி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

வீர ராகவ ராவ்

By

Published : May 22, 2019, 9:52 AM IST

தமிழ்நாட்டில் நடைபெற்ற 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல், 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றில் பதிவான வாக்குகள் நாளை மறுதினம் எண்ணப்படவுள்ளன. இதற்காக தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல், பரமக்குடி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்கு தேவையான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. அதற்கான பாதுகாப்புப் பணியில் 660 காவல் துறையினர், 400 காவல் துறை அலுவலர்கள், 3000-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் வீர ராகவ ராவ் செய்தியாளர் சந்திப்பு

ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளான திருவாடனை 25 சுற்றுகள், ராமநாதபுரம் 24 சுற்றுகள், முதுகுளத்தூர் 28 சுற்றுகள், திருச்சுழி 20 சுற்றுகள், அறந்தாங்கி 20 சுற்றுகள், பரமக்குடி 22 சுற்றுகள் செல்லும் என்றும்- ஒரு சுற்றுக்கு 40 நிமிடங்கள் ஆகும் எனக் கூறினார். மேலும் தற்போது வரை 5,407 வாக்குகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details