தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’நாங்க குடும்பத்துடன் பிழைக்க வரல, மக்களுக்காக உழைக்க வந்திருக்கோம்’ - விஜய பிரபாகரன் - ramanathapuram dmdk candidate

ராமநாதபுரம்: கமுதியில் தேமுதிக இளைஞர் அணி இணைச் செயலாளர் விஜய பிரபாகரன், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

தேமுதிக தேர்தல் பரப்புரை
“அதிமுகவை மீட்க நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் குக்கர்”-விஜய பிரபாகரன்

By

Published : Mar 25, 2021, 1:08 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் முருகனை ஆதரித்து, கமுதியில் தேமுதிகவின் இளைஞர் அணி இணைச் செயலாளர் விஜய பிரபாகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் வாக்காளர் மத்தியில் அவர் பேசியபோது, “அதிமுக, திமுக செய்த ஊழலை மாறி மாறி ஒவ்வொரு கட்சிகளும் பேசி வருகின்றன. ஆனால் மக்கள் பிரச்சினையைப் பற்றி எந்தக் கட்சியும் பேசுவதில்லை. அதற்காகத்தான் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம்.

“அதிமுகவை மீட்க நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் குக்கர்”-விஜய பிரபாகரன்

ஒருத்தர் ஆயிரம் ரூபாய் தருகிறேன், இன்னொருவர் 1,500 ரூபாய் தருகிறேன், கரோனா காலத்தில் 5000 தருகிறேன், பத்தாயிரம் தருகிறேன் என்று கூறி ஓட்டுக்கு பணம் கொடுத்து, வெற்றி பெற்ற பின்னர், ஊழல் செய்து மீண்டும் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஆட்சிக்கு வந்துவிடுவார்கள். எதற்கு இவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்? அதற்கு மக்களாட்சி கொண்டு வந்து விடலாமே.

தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி வீடுதோறும் ரேசன் வரும் என்று சொல்கிறார்கள். இதனை 15 ஆண்டுகளுக்கு முன்பே கேப்டன் சொல்லிவிட்டார். இதுதான் தேமுதிகவின் முதல் தேர்தல் வாக்குறுதி.

மற்ற கட்சிகள் கொடுக்கும் மரியாதையை, தேமுதிகவுக்கு குடுங்க. தேமுதிக உழைப்பு மட்டும் வேணும், வாக்கு மட்டும் வேணும், எங்கே போய்விடப் போகிறது என்று ஏளனமாகப் பார்ப்பது...காசுக்கு மாரடிக்கும் கூட்டமாக இருந்திருந்தால், எப்போதோ கூட்டணியே கைகழுவிவிட்டு சென்றிருப்போம். மற்ற கட்சிகளைப் போல் தேமுதிகவை ஏளனமாக நினைத்தால், முட்டையிடாத கோழியாகப் போய்விடுவீர்கள். நாங்கள் குடும்பத்துடன் பிழைக்க வரல, மக்களுக்காக உழைக்க வந்திருக்கோம்.

எங்க அப்பா விஜயகாந்த்தைப் பார்த்து, ரசித்து வளர்ந்தவன் நான். அவர் மனதில் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று இருக்கிறதோ, அது எல்லாம் எனக்குள்ளும் இருக்கிறது. அதிமுக, அமமுக உட்கட்சி பிரச்சினையினால் நாங்கள் வரவில்லை. நியாயம் எந்தப் பக்கம் உள்ளதோ அந்தப் பக்கம் விஜயகாந்த் குரல் கொடுப்பார். அமமுக பக்கம் நியாயம் இருக்கிறது. அதிமுகவும் அமமுகவும் இணைந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதிமுகவை மீட்க நீங்கள் குக்கர் சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என்று பேசினார்.

இதையும் படிங்க: என் மீதான குற்றச்சாட்டுகளை விசாரியுங்கள்- உத்தவ் தாக்கரேவுக்கு, அனில் தேஷ்முக் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details