தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாம்பன் ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் - ராமேஸ்வரம் ரயில்கள்

ராமநாதபுரம்: பாம்பன் ரயில் பாலத்தில் சென்சார் பொருத்திய பின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சோதனை ஓட்டம்
சோதனை ஓட்டம்

By

Published : Jun 30, 2020, 7:35 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில் முக்கிய பங்காக இருந்து வருவது பாம்பன் ரயில் பாலம். நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பாலம் உறுதியுடன் இருந்து வருகிறது. கஜா புயலின் போது ஏற்பட்ட பாதிப்பினால் நூறு நாட்களுக்கும் மேல் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பாலம் சீரமைக்கும் பணி முடிந்த பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

தற்போது கரோனா ஊரடங்கினால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பாம்பன் பாலத்தில் வர்ணம் பூச்சு, சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன. பாலத்தின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும் விதமாக 84 சென்சார்களை பொருத்தும் பணியை ஐஐடி குழுவினர் கடந்த 23 நாட்களாக செய்துவந்தனர்.
அந்த பணி நிறைவடைந்ததை அடுத்து ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் இன்று (ஜூன் 30) நடைபெற்றது.

இது குறித்து பாம்பன் பொறியாளர் கூறும்போது, "பாம்பன் பாலத்தின் பாதுகாப்பு தன்மையை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் 84 சென்சார்கள் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான பணி கடந்த 23 நாட்களாக நடைபெற்று வந்தது. இன்று மதுரையில் இருந்து ரயில் என்ஜின் கொண்டுவரப்பட்டு பாம்பன் பாலத்தின் மையப்பகுதியில் மித வேகத்தில் ரயிலை ஓட்டி சோதனை நடைபெற்றது. இதன் முடிவுகள் நாளை (ஜூலை 1) தெரியவரும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details