ராமநாதபுரம்:தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள், ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு வருகைதர தொடங்கியுள்ளனர்.
அவ்வாறு வருகை புரியும் மக்கள், தங்களது வாகனங்களை நிறுத்திக்கொண்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், ஆகஸ்ட் 30ஆம் தேதி, ஒருவர் செல்பி மோகத்தால் வாகனத்தின் மேல் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். இச்சம்பவம் பார்ப்போரை பதரச் செய்தது.