தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம்: கமுதி அருகே தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது
குண்டர் சட்டத்தில் கைது

By

Published : Apr 29, 2021, 6:23 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள முகத்துப்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வம், மேழிச்செல்வம், மணிகண்டன் ஆகியோர் கஞ்சா கடத்தல், கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். தொடர்ந்து இவர்கள் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 3 பேரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பரிந்துரையின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் உத்தரவின் பேரில் குண்டர் காவல் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதனையடுத்து அவர்கள் மீது கஞ்சா, கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவிடப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details