தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலா குறித்த கேள்வி: எடப்பாடி சொன்னது இதுதான்...! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ராமநாதபுரம்: சசிகலா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பதிலே வேறு!

சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த முதலமைச்சர்...!
சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த முதலமைச்சர்...!

By

Published : Sep 22, 2020, 10:05 PM IST

கரோனா பரவல் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். அதன்படி இன்று (செப். 22) ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா ஆய்வுப் பணிகளை முதலமைச்சர் ஆய்வுசெய்தார்.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்து அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்பினால் சேர்த்துக் கொள்வீர்களா? எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சசிகலா குறித்த கேள்விக்கு எடப்பாடி சொன்னது இதுதான்!

இதற்கு முதலமைச்சர், “தற்போது இந்தக் கேள்வி இங்கு எழத் தேவையில்லை. ராமநாதபுரம் கரோனா தடுப்பு, மாவட்ட வளர்ச்சிப் பணி குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கவே இங்கு வந்துள்ளேன். அதனால், அதிலிருந்து கேள்விகளைக் கேளுங்கள்” என்றார்.

இதையும் படிங்க...கலவரம் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் பாஜக - இந்திய தேசிய லீக் தலைவர் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details