தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடித் திருவிழா: ராமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் - ramanathaswamy temple news

ராமநாதசுவாமி கோயில் ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.

aadi
ஆடித் திருவிழா

By

Published : Aug 13, 2021, 8:11 AM IST

ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய நாடு முழுவதிலுமிருந்தும் பக்தர்கள் வருகைதருவது வழக்கம். இங்கு ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா, மாசி மகா சிவராத்திரி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா 1ஆம் தேதிமுதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. கரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி ஆடித் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

கரோனா பரவல் கட்டுப்பாடு தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக இந்த ஆண்டு திருவிழாவில் நடைபெறும் சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயிலின் உள்பகுதியில் 3ஆம் பிரகாரத்தில் நடைபெற்றன.

ராமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு ராமநாதசுவாமி-ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் இருவரையும் வைத்து திருவூஞ்சல் உற்சவம் நடைபெற்று, சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து , அம்பாள் சுவாமி சன்னதி வழியாக வீதி உலாவந்து பின்னர் அம்பாள் சன்னதி வழியாக தெற்கு வாசலில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்திற்குச் சென்றது. அங்கு, வேத விற்பன்னர்கள் வேதமந்திரம் முழங்க சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு மேள வாத்தியங்கள் முழங்க ஆச்சாரியர்கள் மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது

இதையும் படிங்க:அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details