தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதல்வர் கொடுத்த உறுதியால் தொகுதிக்கு திரும்பிய கருணாஸ்!

ராமநாதபுரம்: திருவாடானை தொகுதியில் யார் தலையீடும் இருக்காது என முதலமைச்சர் கொடுத்த உறுதியின் அடிப்படையில் மீதமுள்ள இரண்டு ஆண்டுகள் தொகுதியில் மக்கள் பணியை தொடர உள்ளேன் என எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்

karunas

By

Published : Jul 29, 2019, 5:13 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது. இதனால் கருணாஸ் தனக்கு தொகுதியில் பாதுகாப்பு இல்லை என்று கடந்த மூன்று ஆண்டுகளாக தொகுதி பக்கம் வரமால் இருந்தார். இந்நிலையில் இன்று தனது தொகுதியின் தேவைகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவிடம் பேசினார்.

மாவட்ட ஆட்சியர் வீரராகவிடம் பேசிய கருணாஸ்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திருவாடானை தொகுதியில் உள்ள படித்த 2000 முதல் 5000 இளைஞர்களுக்கு அவர்களின் தகுதி அடிப்படையில் வங்கிக் கடன் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும். அதே போல் குடிமராமத்து திட்டத்தில் தனிநபர் தலையீடு இல்லாமல் விவசாயிகளின் மூலமாக நடைபெறவேண்டும் என கோரிக்கை வைத்தேன். மேலும் எனது தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் மக்களின் தேவைகளை சேகரித்து பட்டியிலிட்டு மக்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏற்பாடுசெய்யவுள்ள சிறப்புக்கூட்டத்தில் அனைத்து அதிகாரிகள் முன்னிலையில் வழங்க இருக்கிறேன்.
மாவட்ட ஆட்சியரை சந்தித்த கருணாஸ்

என்னால் சமுதாய ரீதியாக எந்த பிரச்னையும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே இத்தனை நாட்கள் தொகுதி பக்கம் வரமால் இருந்தேன். என் தொகுதியில் யார் தலையீடும் இருக்காது என்று முதல்வர் உறுதியளித்ததையடுத்து மீதமுள்ள இரண்டு ஆண்டுகள் மக்கள் பணி செய்ய இருக்கிறேன் என்றார்

ABOUT THE AUTHOR

...view details