தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம்'- மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு! - கரோனா பாதிப்பு

ராமநாதபுரத்தில் 800 டோஸ் ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பு உள்ளதால் மக்கள் பயப்பட வேண்டாம் என மருத்துவ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ரெம்டெசிவிர் மருந்து
ரெம்டெசிவிர் மருந்து

By

Published : May 6, 2021, 2:28 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகம் எடுத்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் சிலருக்குக் கரோனா தொற்று, நுரையீரலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மிகவும் மோசமான நிலை ஏற்படும் சூழல் உள்ளது. இவர்களுக்கு உடனடியாக ரெம்டெசிவிர் 3 டோஸ் முதல் 4வரை கொடுக்கப்பட்டு பாதிக்கப்படுவோரின் உயிர் காப்பாற்றப்படுகிறது.

இந்த டோஸ் வெளி சந்தையில் 20 முதல் 30 ஆயிரம் விலைக்கு விற்கப்படுகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது கரோனாவால் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு மூச்சு திணறல் மிகவும் அதிகமாக இருப்பதால் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டுவருகிறது.

இன்று (மே 6) கையிருப்பாக 800 ரெம்டெசிவிர் குப்பிகள் உள்ளதாக மருத்துவமனை மருத்துவக் கல்லூரி டீன், அல்லி மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மிகவும் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்ற இந்த தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது. இதனால், மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details