தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன்பிடிக்கச் சென்ற மகன் மாயம் - தாயார் மீன்வளத்துறையிடம் மனு

ராமநாதபுரம்: கர்நாடகாவிற்கு மீன்பிடி தொழிலுக்குச் சென்ற மகன் கடலில் மாயமாகியதால், அவரை மீட்டுத் தரக்கோரி அவரது தாயார் மீன்வளத்துறை அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

By

Published : Jan 23, 2020, 7:41 AM IST

மீனவர் மாயம்
மீனவர் மாயம்

ராமநாதபுரம் மாவட்டம் சுரங்காட்டு பகுதியில் வசித்துவருகிறார்கள் விஜயலெட்சுமி - பூமிபாலன் தம்பதி. இவர்களின் மூத்த மகன் மோகனராம் குடும்ப வறுமையைப் போக்குவதற்குகாக மீன்பிடி வேலைக்கு கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூருக்கு கடந்த ஜனவரி 10ஆம் தேதி சென்றுள்ளார்.

அங்கு அமீன் என்பவருக்குச் சொந்தமான படகில் கடந்த 13ஆம் தேதி மோகனராம் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த மோகனராம் கடலில் விழுந்து மாயமாகியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை கரைக்குத் திரும்பிய சக மீனவர்கள், காவல் நிலையத்தில் தெரிவித்ததையடுத்து மோகனராம் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகன் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் மோகனராமின் தாயார் விஜயலெட்சுமி தனது உறவினர்களுடன் இணைந்து, ராமநாதபுரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் கடலில் மாயமான மகனை மீட்டுத் தரக்கோரி மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க: வில்சன் கொலை வழக்கு: மேலும் மூன்று குற்றவாளிகள் சிக்கினர்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details