தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறந்த மனைவியை யாருக்கும் தெரியாமல் புதைத்த கணவன்

ராமநாதபுரம் அருகே இறந்த மனைவியை யாருக்கும் தெரியாமல் கணவன் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இறந்த மனைவியை யாருக்கும் தெரியாமல் புதைத்த கணவன்
இறந்த மனைவியை யாருக்கும் தெரியாமல் புதைத்த கணவன்

By

Published : Apr 20, 2021, 12:47 AM IST

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே காக்கூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மூக்காண்டி என்ற முதியவர். இவர் மனைவி அழகு என்பவருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் மகனும் உள்ளனர். இதையடுத்து, சுமார் 15 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது மனைவி அழகுவை மூக்காண்டி பார்த்துவந்துள்ளார்

இந்நிலையில், காக்கூர் கிராம நிர்வாக அலுவலர் ராமையா என்பவர் நேற்று (ஏப்ரல் 19) அழகு இறந்துவிட்டதாகவும் அவரை யாருக்கும் தெரியாமல் மூக்காண்டி காக்கூர் சமத்துவத்தில் உள்ள சுடுகாட்டில் புதைத்துள்ளதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து, தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சோதனை செய்து யாருக்கும் தெரியாமல் புதைத்த மூத்தாடியை கைப்பற்றினர்.

விசாரணையில் ''தனது மனைவி இறந்துவிட்டதால் யாருக்கும் தெரியாமல் தானாக சென்று புதைத்தேன்’’ என்று மூக்காண்டி ஒப்புகொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தண்டவாளத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றிய நபர் - ட்ரெண்ட் ஆகும் காணொலி!

ABOUT THE AUTHOR

...view details