தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’திமுக ரவுடிகளின் கூடாரம்’ - அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி பேச்சு - தேர்தல் பிரச்சாரம்

முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி கமுதி அருகே மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில், ’திமுக ரவுடிகளின் கூடாரம்’ எனக் கூறினார்.

முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி கமுதி அருகே மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில், ’திமுக ரவுடிகளின் கூடாரம்’ என கூறினார்.
முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி கமுதி அருகே மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில், ’திமுக ரவுடிகளின் கூடாரம்’ என கூறினார்.

By

Published : Mar 16, 2021, 8:22 AM IST

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி கமுதி பேரூராட்சிக்குள்பட்ட கண்ணார்பட்டி, குண்டாறு திரும்பும் தெரு, மேட்டுத் தெரு, ஆதிதிராவிடர் தெரு, முத்துமாரி நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தில் பேசிய கீர்த்திகா முனியசாமி, “மக்களுக்கு எதிராக அராஜகம் செய்யும் கட்சி திமுக. பார்த்திபனூரில் நடைபெற்ற வேட்பாளர் வரவேற்புக் கூட்டத்தில் காவலரைத் தாக்கிய மோசமான கட்சி திமுக. விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை.

ஆனால், அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக நிறைவேற்றுவார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாம் செய்யும் ஒரே நன்றிக் கடன், மீண்டும் அதிமுக ஆட்சியைக் கொண்டுவருவதே.

முதுகுளத்தூர் தொகுதி மக்களின் பிரச்னைகள் சட்டப்பேரவையில் ஒலிக்க நான் அயராது உழைப்பேன். தற்போது முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெளியூர்காரர். அவரைப் பார்க்க நீங்கள் சென்னைதான் போக வேண்டும். சொந்த கட்சிக்காரர்களே திமுக வேட்பாளரை எளிதில் பார்க்க முடியாத நிலையில், பொதுமக்களின் குறைகளை எப்படி அவர் தீர்ப்பார்? ஆகையால், தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க :உள்ளாட்சிகளை நிராகரிக்கலாமா தேர்தல் அறிக்கைகள்?

ABOUT THE AUTHOR

...view details