தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை தூண்டிவிடுபவர் ஸ்டாலின் - முதல்வர் குற்றச்சாட்டு - ஸ்டாலின்

ராமநாதபுரம் : பாஜக வேட்பாளர் நாயினார் நாகேந்திரனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தபோது, தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் தூண்டிவிடுவதாக அவர் குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

By

Published : Apr 3, 2019, 9:26 AM IST

அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் பரப்புரை மேற்கொண்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அப்போது அவர் பேசியதாவது தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 35 ஆயிரம் போராட்டங்களை அதிமுக அரசு சந்தித்துள்ளது. இப்படி போராட்டம் நடத்திக்கொண்டே இருந்தால் எப்படி ஆட்சி நடத்துவது என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டில் நடைபெறும் அணைத்து போராட்டங்களையும் தூண்டிவிடுவது திமுக தலைவர் ஸ்டாலின் தான் என அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் நாற்காலியில் மீது ஒரு கண் இருப்பதாகவும் அவர் தான் பதவியேற்ற நாளில் இருந்து தினந்தோறும் பதவி விலக வேண்டும் என்று கூறி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details