இலங்கையைச் சேர்ந்தவர் அஜய்குமார் (30). சிங்களரான இவர், 2017ஆம் ஆண்டு எவ்வித ஆவணமும் இன்றி தனுஷ்கோடி வந்தார். சட்டவிரோதமாக ஊடுருவியதால் இவர் மீது கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையம், தனுஷ்கோடி காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பின்னர் விடுவிக்கப்பட்ட இவர், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாம் தனிக் குடியிருப்பில் தங்கவைக்கப்பட்டு காவல் துறையினர் கண்காணித்துவந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இலங்கை அகதிகள் குடியிருப்புகள் குறித்து மண்டபம் முகாம் அகதிகள் மறுவாழ்வு தனி துணை ஆட்சியர் ஆய்வுசெய்தார். அப்போது, அஜய்குமார் மார்ச் 17ஆம் தேதிமுதல் தனிக்குடியிருப்பிலிருந்து மாயமானது தெரியவந்தது.
மாயமான சிங்கள இளைஞர் அஜய்குமார் இது குறித்து இலங்கை அகதிகள் முகாம் சிறப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இதேபோல், இங்கு தனிக்குடியிருப்பில் காவல் துறையினர் சிறப்புக் கண்காணிப்பில் தங்கியிருந்த தயாபராஜ்- உதயகலா தம்பதி தங்களது 3 குழந்தைகளுடன் கடந்த 10 மாதங்களுக்கு முன் மாயமானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டிக்டாக்கில் காதலா? திடீரென்று மாயமான கணவர் ... மனைவி புகார்!