ராமநாதபுரம்:இலங்கையில் கடும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதோடு அங்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை தாக்கு பிடிக்க முடியாத மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வரும் சூழல் உருவாகி வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் தடை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஆறு பேர் நிற்பதாக கியூ பிராச் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.