தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கச்சத்தீவு அருகே மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டூழியம் - இலங்கை கடற்படையினர்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர்.

fishermen
fishermen

By

Published : Dec 13, 2020, 1:37 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதும், இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டியடிப்பதும் தொடர்கதையாகிவருகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று (டிச. 12) காலை 500-க்கும் மேற்பட்ட விசைப் படகில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றிருந்தனர்.

நேற்று இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு ரோந்துப் பணியில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் கற்கள் மற்றும் பாட்டில் கொண்டு தாக்குதல் நடத்தி விரட்டி அடித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் மீன்பிடிக்கச் சென்ற அனைத்து மீனவர்களும் அவசர அவசரமாகக் கரை திரும்பினர். இதனால் எதிர்பார்த்தளவு மீன் இன்றி மீனவர்கள் கரை திரும்பினர்.

இதனால் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details