தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு : இலங்கை கடற்படை அட்டூழியம் - aval atrocity

பாரம்பரிய இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

By

Published : Jul 6, 2021, 1:21 PM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் விசைப்படகுகளுடன் நேற்று (ஜூலை 6) ஆம் தேதி கடலுக்குச் சென்றனர். பாரம்பரிய மீன்பிடி இடமான தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு எட்டுக்கும் மேற்பட்ட அதிநவீன ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், இது இலங்கை கடற்பகுதி. இங்கு மீன்பிடிக்க கூடாது, உடனடியாக இந்திய கடற்படைக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரித்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தங்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்ததாகவும் அவர் கூறியுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இலங்கை கடற்படையினர் கெடுபிடி காரணமாக மீன்பிடி தொழில் செய்ய முடியவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கொச்சியில் இந்திய மாலுமி பிணமாக கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details