தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை - சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது! - கொலை வழக்கில் ஆறு பேர் கைது

ராமநாதபுரத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவர்கள் உள்பட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை
முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை

By

Published : Aug 2, 2021, 5:14 AM IST

ராமநாதபுரம்:கமுதி அருகேயுள்ள கிழக்காக்காகுளத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு கீழநரியின் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (30) என்ற இளைஞர் தொலைபேசியில் தொடர்புகொண்டு காதலிப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து ரமேஷ் மீது மண்டலமாணிக்கம் காவல் நிலையத்தில் புகார் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இளைஞர்கள் இடையே தகராறு

இதற்கிடையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா உள்ளிட்ட இளைஞர்கள் அந்த இளம்பெண்ணை ரமேஷிடம் பேசவைத்து, ஆசைவார்த்தை கூறி அவரது கிராமத்துக்கு வரவழைத்துள்ளார். அங்கிருந்து இளைஞர்கள் ஒன்றுகூடி ரமேஷை கட்டி வைத்து அடித்துள்ளனர்.

இது, இரு கிராம இளைஞர்கள் இடையே பிரச்னையாக உருவெடுத்தது. இதனையடுத்து, கீழநரியிலுள்ள தனது நண்பர் வீட்டுக்குச் சென்று வரும் வழியில் கீழநரியின் பேருந்து நிலையம் அருகே மறைந்திருந்த கும்பல் கருப்பையாவை வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை செய்தது.

ஆறு பேர் கைது

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய கீழநரியன் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவர், 16 வயதுடைய சிறுவன், கார்த்திகைசாமி (29 ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், முக்கிய குற்றவாளியான ரமேஷ் (30), தமிழரசன் (18) ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய ஆறு பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கொலை வெறி தாக்குதல் நடத்திய நான்கு பேர் மீது குண்டாஸ்

ABOUT THE AUTHOR

...view details