தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடத் தகராறு காரணமாக ஊராட்சி முன்னாள் தலைவர் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு! - ராமநாதபுரம்

ராமநாதபுரம்: கமுதி அருகே ஏற்பட்ட இடத் தகராறில் ஊராட்சி முன்னாள் தலைவர் உள்பட ஆறு பேர் அரிவாளால் வெட்டப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இட தகராறு காரணமாக முன்னாள் ஊராட்சி தலைவர் உட்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு!
இட தகராறு காரணமாக முன்னாள் ஊராட்சி தலைவர் உட்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு!

By

Published : Apr 25, 2021, 7:10 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மரக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஊராட்சி முன்னாள் தலைவர் கோவிந்தசாமி. அதே பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இருவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துவந்தது.
இந்த நிலையில் நேற்று (ஏப். 23) மரக்குளம் கிராமத்தில், கோவிந்தசாமி தனது வீட்டிற்கு முன்பாக கார், இருசக்கர வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக ரஞ்சித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, ரஞ்சித் தரப்பினர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கோவிந்தசாமி, அவரது மனைவி கலையரசி, மகன் சந்தன பாரதி, உறவினர்கள் சசி, ராகு, இன்பத்தமிழ் உள்ளிட்ட ஆறு பேரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, காயமடைந்தவர்கள் ஆறு பேரும் கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

இது குறித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:'மக்கள் இன்னொரு ஊரடங்கை தாங்க மாட்டார்கள்'-மு.க.ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details