ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஆத்திகுளம் கிராமத்தில் முப்பிடாரி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் போது பொன்னாடை அணிவிப்பதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கிக் கொண்டனர். அப்போது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் முருகானந்தம், தகராறை தடுக்க முயன்றார். இதில் உதவி ஆய்வாளர் மீதும் கட்டை விழுந்ததில், அவருக்கு மூக்கு, தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
கோயில் திருவிழாவில் இருதரப்பு மோதல்; உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்! - ராமநாதபுரம் கோயில் திருவிழாவில் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டார்
ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டது தொடர்பாக 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அதனையடுத்து போலீஸார், உதவி ஆய்வாளரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காயமடைந்த உதவி ஆய்வாளர் புகாரின்படி முதுகுளத்தூர் போலீஸார் ஆத்திகுளம் கிராமத்தில் இருதரப்பினரைச் சேர்ந்த திருமூர்த்தி(38), நீதி(38), முத்துராமலிங்கம்(36), சந்திரன்(62), முத்துராமலிங்கம்(49), ராஜேந்திரன்(43) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பணியில் சேர்ந்து 18 நாட்களில் தபால்துறை பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை!