தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்தவர் படுகொலை!

ராமநாதபுரம்: இளமனூரில் புரண்டி கண்மாயில் மணல் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்தவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மோகன்

By

Published : Jun 3, 2019, 8:37 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை அருகேயுள்ள இளமனூரில் புரண்டி கண்மாயில் இருந்து மணலை திருடியவர்களுடன் இளமனூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மண் அள்ளுவதை நிறுத்திவிட்டு, அங்கிருந்து சென்றவர்கள் சிறிது நேரம் கழித்து இரண்டு காரில் ஆயுதங்களுடன் வந்து தங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் இளமனூரைச் சேர்ந்த பரதன் என்பவரது மகன் மோகன் (45) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் (33), செல்வம் (32), சாத்தைய்யா (44), முருகேசன் (45) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில், உயிரிழந்த பரதனின் குடும்பத்தினர் கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உடலை வாங்கமாட்டோம் என மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மோகனின் உறவினர்கள்

இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ராமநாதபுரம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details