ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அண்ணாநகர், குடிசை மாற்றுவாரியம் குடியிருப்பு, இருவேலி, துரைச்சாமிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
கோழி கழிவுகளால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம்! - ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி
ராமநாதபுரம்: சாயல்குடியில் சாலையோரத்தில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
கோழி கழிவுகளால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம்!
குடியிருப்புக்குச் செல்லும் பிரதான சாலை ஓரத்தில் குப்பைகளும், கோழி கழிவுகளும் அதிகமாக கொட்டப்படுகிறது. இதன் காரணமாக, அவ்வழியாக செல்லும்போது தூர்நாற்றம் வீசுவதால் குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாகி வருவதோடு, தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உருவாகிவருகிறது .
இதற்கு சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.