தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புயலால் பாதிக்கப்பட்ட 61 படகுகளுக்கு நிவாரணம் கோரப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர் - Ramanathapuram storm

இராமநாதபுரம்: புரெவி புயலால் பாதிக்கப்பட்ட 61 படகுகளுக்கு மத்திய குழுவிடம் நிவாரணம் கோரப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

By

Published : Jan 4, 2021, 6:16 AM IST

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட புரெவி புயல் பாதிப்புகளை, அண்மையில் மத்திய குழு வந்து பார்வையிட்டு சென்றது.

அப்போது மத்திய குழுவினர் ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று புயலால் பாதிக்கப்பட்ட படகுகள், மீனவர்களை பார்த்தனர்.

மாவட்டத்தில் 61 படகுகள் சேதமடைந்துள்ளன. ஆகவே பாதிக்கப்பட்ட அனைத்து படகுகளுக்கும் மத்திய குழுவிடம் நிவாரணம் கோரப்பட்டுள்ளது.

புயல் காலத்தில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதங்கள் தவிர்க்கப்பட்டன" என்றார்.

இதையும் படிங்க: வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்யவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details