ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடல்பகுதியில் பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவைகள் கடல் வளத்தை பாதுகாக்கும் அரணாக இருந்து வருகிறது.
விசைப் படகு மோதி உயிரிழந்த அரிய வகை மீன் இந்தநிலையில் நேற்று (ஜூலை 29) கீழக்கரை கடல் பகுதியில் அரிய வகை மீன் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு சென்று ஆய்வு செய்ததில் அது அரிய வகை அம்மான் உளுவை மீன் என்பது தெரியவந்தது.
கால்நடை மருத்துவர் கடற்கரையில் உடல் கூராய்வு செய்தார். அதில் அது அம்மான் உளுவை பெண் மீன் என்பதும் 500 கிலோ எடையும் 7 அடி நீளம், 2 அடி அகலம் கொண்டுள்ளது எனக் கூறினார்.
மேலும் பெரிய விசைப்படகின் ப்ரோப்பளரில் மோதி மீனின் துடிப்பு சேதமடைந்து உயிரிழந்துள்ளதாக மருத்துவர் தெரிவித்தார். இதையடுத்து அந்த மீன் கடல் கரை ஓரத்தில் புதைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத வன திருக்கை!