தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பு அலுவலர் பொறுப்பேற்பு!

ராமநாதபுரம்: புதிதாக தொடங்கப்படவுள்ள மருத்துவக் கல்லூரிக்கான சிறப்பு அலுவலர் மருத்துவர் எம். அல்லி பொறுப்பேற்றுக் கொண்டார்.

By

Published : Nov 19, 2019, 8:12 PM IST

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நீலகரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர் ஆகிய 6 மருத்துவக் கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. அதனையடுத்து தமிழகத்தில் 6 மருத்துவக் கல்லூரிகள் தலா ரூ. 325 கோடி செலவில் அமைக்கப்படும், இதற்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி செலவிடும் என அரசாணை வெளியிடப்பட்டது.

வரும் 2020-21ம் கல்வியாண்டில் இக்கல்லூரிகள் செயல்படவுள்ளன. அதனால் இக்கல்லூரிகளுக்கு சிறப்பு அலுவலர் மற்றும் டீன் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு, சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியை எம்.அல்லி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நிர்வாக அலுவலக கட்டடத்தில் ஒதுக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பு அலுவலர் மருத்துவர் எம்.அல்லி கூறும்போது, ராமநாதபுரம் பட்டணம்காத்தான் அம்மா பூங்கா அருகே 22 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான கட்டடம் கட்ட, மாநில மருத்துவ இயக்குநர் அலுவலக குழு விரைவில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும். அதன்பின்னர் கட்டடப் பணிகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details