இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து செப்டம்பர் 30ஆம் தேதி கடலுக்கு தங்கச்சிமடத்தை சேர்ந்த தனி கிளாஸ் என்பவரின் படகில் சென்ற கார்சன் என்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயமானர். அவரின் உடலை சக மீனவர்கள் தேடி கிடைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து கப்பல், ஹெலிகாப்டர் மூலமாகவும் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவரது உடல் கடந்த 4ஆம் தேதியன்று இலங்கை, அல்லைபட்டி கடற்கரை பகுதியில் ஒதுங்கியது.
இலங்கையில் கரை ஒதுங்கிய மீனவர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்! - கடலில் உயிரிழந்த மீனவர்கள்
இராமநாதபுரம்: இலங்கையில் கரை ஒதுங்கிய இராமேஸ்வரம் மீனவரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உயிரிழந்த மீனவர்
இதனைத் தொடர்ந்து கார்சனின் உடலை சொந்த ஊர் கொண்டுவர மீன்வளத்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று (அக்.6) இறந்த கார்சன் உடல் கடல் மார்கமாக இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
அதன்பின் மீனவர் உடல் உறவினர்களிடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து தங்கச்சிமடம் பகுதியில் மீனவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.