தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

71ஆவது குடியரசு தினம்: பாம்பனில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்! - 71ஆவது குடியரசு தினம்

ராமநாதபுரம்: 71ஆவது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பாம்பன் தொடர்வண்டி பாலத்தில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Republic day pamban bridge, ramesawaram pamban bridge under police security, பாம்பனில் துப்பாக்கி ஏந்திய போலீஸ், 71ஆவது குடியரசு தினம்
பாம்பனில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்

By

Published : Jan 25, 2020, 8:18 PM IST

71ஆவது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாட்டின் முக்கிய தொடர்வண்டி நிலையங்கள், கோயில்கள், விமான நிலையங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குடியரசு தின முன்னேற்பாடாக ராமநாதபுரத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல் ராமநாதபுரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

அதேபோல் தொடர்வண்டி நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகள் தீவிர சோதனைக்கு பிறகே நிலையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றது. கடலோரப் பகுதிகளில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

பாம்பனில் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸ்

ABOUT THE AUTHOR

...view details