ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்றும், குடிப்பதற்கு தண்ணீர், உணவு போன்றவை கூட சரிவர வழங்கப்படுவதில்லை எனவும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஒரே முகக்கவசத்தை இரண்டு, மூன்று நாள்களுக்கு பயன்படுத்துவதாகவும், தனிமைப்படுத்தப்பட்டு கரோனா வார்டுகளில் தங்கியுள்ள நோயாளிகள் அவர்களது வார்டுகளை விட்டு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.