மக்களவை தோ்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தையடுத்து தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து ராவ் கூறியதாவது,ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்காளர் சுருக்கத் திருத்தம்-2019 அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.31 அன்று வெளியிடப்பட்டதாகவும், மாவட்டத்தில் 784 இடங்களில் 5,60,173 ஆண் வாக்காளர்களும், 5,62,347 பெண் வாக்காளர்களும், 69 மூன்றாம் பாலினத்தைவரும் மொத்தம் 11,22,589 வாக்காளர்கள் இருந்ததாக கூறினாா்.
ராமநாதபுரம்: மக்களவை தொகுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - வாக்காளர்
ராமநாதபுரம்: மக்களவை தொகுதியில் 15,53,761 வாக்காளர்கள் இருப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வீரராகவ ராவ் கூறியுள்ளாா்.
ராமநாதபுரம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் 2 ,19,390 வாக்காளர்களையும், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் 2,10,728 வாக்காளர்களையும் ராமநாதபுரம் மக்களவை தொகுதிக்குள் சோ்த்த பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி 1,916 வாக்குச்சாவடி மையங்களில் 7,73,036 ஆண் வாக்காளர்களும், 7,79,643 பெண் வாக்காளர்களும், 82 மூன்றாம் பாலினத்தவரு மொத்தம் 15,52,761 வாக்காளர்கள் உள்ளதாக கூறியுள்ளாா்.